அமெரிக்கா மேரிலாண்டில் அனாபோலிஸ் என்ற இடத்தில் இயங்கிவந்த '' கேபிடல் கேசட்'' என்ற செய்தித்தாள் அலுவலகத்தில் மர்ம நபர்கள் ஏற்படுத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் இதுவரை 5 பேர் இறந்துள்ளனர்.
சுமார் 170 வேலை செய்துகொண்டிருந்த செய்தித்தாள் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த துப்பாக்கி சூடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதல் பற்றி போலீசார் தெரிவிக்கையில், ஏற்கனவே அந்த செய்தித்தாள் நிறுவனத்தின் மீது பலமுறை சமூக ஊடகங்களிலிருந்து மிரட்டல்கள் வந்துள்ளதாகவும் ஆனால் தற்போது நடந்த இந்த துப்பாக்கி சூடு எதிர்பாராத விதமானது என தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த துப்பாக்கி சூடு சம்பந்தமாக ஒரு நபரை பிடித்து விசாரித்து வருகின்றனர் . அந்த நபர் தனது பையில் போலி கிரேனைட் குண்டுகள் மற்றும் கண்ணிவெடிகள் வைத்திருந்தது தெரியவந்துள்ளது. மேலும் அந்த துப்பாக்கி சூட்டில் இருந்து தப்பித்த ஒருவர் இந்த சம்பவம் குறித்து குறிப்பிடுகையில், அலுவகத்தில் மேஜையில் அமர்ந்து பணியாற்றிக்கொண்டிருக்கும் பொழுது துப்பாக்கியால் சுட்டு பணியாளர்கள் அலறி ஓடும் சத்தமும், துப்பாக்கி குண்டுகளை நிரப்பவும் சத்தமும் கேட்டால் எப்படி இருக்கும் அவ்வளவு கொடுமையான, கோரமான தருணம் அது என கூறியுள்ளார்.
இந்த துப்பாக்கிசூட்டு சம்பவத்தால் நியூயார்க்கில் உள்ள பல செய்தித்தாள் மற்றும் ஊடக அலுவலகங்களுக்கு பாதுகாப்புபடை அனுப்பப்பட்டது. மேலும் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து டிரம்ப் வருத்தம் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்