img
img

ஹார்லி டேவிட்சன் ஆலைகள் வேறு நாடுகளுக்கு மாற்றம் டிரம்ப் கண்டனம்
புதன் 27 ஜூன் 2018 13:07:25

img

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தனது நாட்டில் இறக்குமதி செய்யப்படுகிற உருக்கு இறக்குமதிக்கு 25 சதவீதமும், அலுமினியம் இறக்குமதிக்கு 10 சதவீதமும் வரி விதித்து கடந்த மார்ச் மாதம் நிர்வாக உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.

இது ஐரோப்பிய நாடுகளுக்கு பெருத்த அடியாக அமைந்தது. இதையடுத்து அந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற போர்போன் விஸ்கி, மோட்டார் சைக்கிள்கள், ஆரஞ்சு பழச்சாறு உள்ளிட்ட பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் 2.8 பில்லியன் யூரோ (சுமார் ரூ.22 ஆயிரத்து 120 கோடி) வரி விதிப்பை அறிவித்து நடைமுறைப்படுத்தி உள்ளது.

இது அமெரிக்காவில் மோட்டார் சைக்கிள்களை தயாரித்து வரும் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இதன் காரணமாக ஐரோப்பிய சந்தைக்கான தனது மோட்டார் சைக்கிள்களை தயாரிக்கும் ஆலைகளை அமெரிக்காவில் இருந்து வெளியேற்றி, வேறு நாடுகளில் அமைக்க ஹார்லி டேவிட்சன் நிறுவனம் முடிவு எடுத்து உள்ளது.

இதற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கண்டனம் தெரிவித்து டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டு உள்ளார். அதில் அவர், ‘‘முதலில் (ஐரோப்பிய ஒன்றியத்துக்கு) ஹார்லி டேவிட்சன் வெள்ளைக்கொடி காட்டுவது அதிர்ச்சி அளிக்கிறது. அந்த நிறுவனத்துக்காக நான் கடினமாக போராடினேன். இறு தியில் அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு விற்பனை செய்யக்கூடிய மோட்டார் சைக்கிள்களுக்கு வரி செலுத்த மாட்டார்கள். இது நமது வர்த்தகத்தை மோசமாக பாதித்து உள்ளது’’ என கூறி உள்ளார்.

ஹார்லி டேவிட்சன் நிறுவனத்துக்கு ஆஸ்திரேலியா, பிரேசில், இந்தியா, தாய்லாந்து, அமெரிக்க நாடுகளில் ஆலைகள் இருந்து வருவது குறிப்பி டத்தக்கது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img