img
img

தொடரும் வட கொரியா அணு ஆயுத அச்சுறுத்தல் மீண்டும் அமெரிக்க தடைவிதிப்பு
சனி 23 ஜூன் 2018 16:45:45

img
வாஷிங்டன்
 
இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதி  டொனால்டு டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் யுன் இடையே ஒரு வரலாற்று சந்திப்பு நிகழ்ந்தது. வடகொரியா அதிபர் கிம் ஜாங் யுன், அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவதாக அறிவித்தார். அதற்கு பதிலாக தென்கொரியாவுடன் இணைந்து போர் பயிற்சிகளில் ஈடுபடமாட்டோம் என அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இந்நிலையில் அதிபர் டிரம்ப் கூறியதை உறுதிப்படுத்தும் விதமாக இன்று அமெரிக்கா மற்றும் தென்கொரியா இடையேயான கூட்டு ராணுவ போர் பயிற்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 
 
இந்த அறிவிப்பு வெளியாகி பத்தே நாட்கள் ஆன நிலையில், வட கொரியாவின் அணு ஆயுதங்களால் தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதாக கருத்து தெரிவித்த, அமெரிக்க அதிபர் டிரம்ப், அந்நாட்டின் மீதான தடைகளை புதுப்பித்து உத்தரவிட்டுள்ளார்.
 
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வட கொரியாவின் அணுசக்தி ஆயுதங்களைப் பயன்படுத்தி "அசாதாரண மற்றும் அசாதாரணமான அச்சுறுத்தல்" தொடர்கிறது என்று கிம் ஜாங் யுன் ஆட்சியின் மீதான தடைகளை விரிவுபடுத்தியுள்ளார்.
 
இந்த நிலையில் அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜனநாயக கட்சி, சிங்கப்பூர் உச்சிமாநாடு வெற்றி பெற்றதாக தற்பெ ருமையுடன் டிரம்ப் கூறியதற்கும், தற்போதைய நடவடிக்கைக்கும் அதிக முரண்பாடுகள் இருப்பதாக கூறியுள்ளது. 

 

 

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img