நியூயார்க்:
அமெரிக்க தொலைக்காட்சி பிரபலம் கிம் கர்தஷியான் வெஸ்ட், அமெரிக்க அதிபர் டிரம்பை நேரில் சந்தித்து 62 வயது பெண் ஒருவரை சிறையில் இருந்து விடுதலை செய்ய வைத்துள்ளார். இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த அலிஸ் மரியா ஜான்சன் என்ற பெண், கடந்த 1996ல் போதை பொருள் பயன்படுத்தியதற்காக சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவருக்கு 41 வயது. தன்னுடைய மகனை விபத்தில் இழந்துவிட்டு, வேலையை இழந்து விட்டு, திருமணம் விவாகரத்தில் முடிந்த காரணத்தால் போதை பொருளுக்கு அடிமையாகி உள்ளார்.
அதே சமயம் சிலருக்கு அவர் போதை பொருளும் விற்பனை செய்துள்ளார். இதையடுத்து அவருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது. பெயில் வாங்க முடியாத ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது. இவரை அமெரிக்காவும் அப்படியே மறந்து போனது. இந்த நிலையில் அமெரிக்க தொலைக்காட்சி பிரபலம் கிம் கர்தஷியான் வெஸ்ட், அமெரிக்க அதிபர் டிரம்பை சில நாட்களுக்கு முன்பு சந்தித்தார். இந்த சந்திப்பில் பல முக்கியமான பிரச்சனைகள் குறித்து கிம், திறம்படம் பேசினார். இந்த சந்திப்பு பெரிய அளவில் பிரபலம் ஆனது.
அந்த சந்திப்பில் கிம், மரியா ஜான்சன் குறித்து பேசியுள்ளார். அவரை விடுதலை செய்ய வேண்டும் கோரிக்கை வைத்துள்ளார். இப்போது உண்மை யிலேயே கிம் கோரிக்கையின்படி மரியா விடுதலை செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் தன்னுடைய சொந்த முயற்சியின் படி இந்த முடிவை எடுத்துள்ளார். மரியா பெரிய தண்டனையை அனுபவித்துவிட்டார், அவரை விடுதலை செய்வதே சிறந்தது என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்