அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், தாம் தவறாக நடந்து கொண்டதாக கூறி, செயலாளராக பணியாற்றிய மோனிகா லெவின்ஸ்கியிடம் பொது நிகழ்ச்சி ஒன்றில் மன்னிப்பு கோரியுள்ளார்.அமெரிக்க அதிபராக கிளிண்டன் இருந்தபோது, அவரது உதவியாளராக இருந்தவர் மோனிகா லெவின்ஸ்கி. அப்போது இருவருக்குமிடையே தவறான உறவிருந்ததாக புகைப்படங்களோடு ஊடகங்களில் செய்தி வெளியானது.
நியூயார்க் நகரில் தமது வாழ்க்கை வரலாறு குறித்த புத்தகத்தை வெளியிட்ட பில் கிளிண்டன், பார்வையாளர்களிடையே உரையாற்றினார். அப்போது சமூக வலைத்தளங்களில் பெண்கள் மீதான பாலியல் துன்பம் குறித்த மி டு MeToo ஹேஷ்டாக் குறித்து பாராட்டு தெரிவித்தார். மோனிகாவிடம் தவறாக நடந்து கொண்டதற்காக, அவரது குடும்பத்தினர், அமெரிக்க மக்கள் மற்றும் அமைச்சர்களிடம் மன்னிப்பு கோருவதாக தெரிவித்தார்.