img
img

கவுதமாலாவில் திடீரென வெடித்து சிதறிய எரிமலை: 25 பேர் உடல் கருகி பலி
திங்கள் 04 ஜூன் 2018 12:28:49

img

கவுதமாலா சிட்டி: கவுதமாலாவில் எரிமலை திடீரென வெடித்து சிதறியதில் வெடிக்கை பார்த்துக்கொண்டிருந்த 25 பேர் உடல் கருகி உயிரிழ்ந்தனர். கவுதமாலா நாட்டில் தலைநகர் கவுதமாலா சிட்டிக்கு 40 கி.மீட்டர்கள் தொலைவில் பியூகோ எரிமலை அமைந்துள்ளது. இதனருகே சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் பகுதியான ஆன்டிகுவா நகரமும் அமைந்துள்ளது. இங்கு அதிகளவு காபி தோட்டங்கள் உள்ளன. இந்நிலையில், பியூகோ எரிமலை திடீரென்று வெடித்து சிதறியுள்ளது.

இதில் எரிமலையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த 25 பேர் பரிதாபமாக உடல்கருகி பலியாயினர். முதலில் 6 பேர் மட்டும் பலியானதாக தகவல் வெளியான நிலையில் 25 பேர் பலியானதாக அந்நாட்டு அரசு உறுதி செய்துள்ளது. அவர்களில் குழந்தைகளும் அடங்குவர்.எரிமலையில் இருந்து 8 கி.மீட்டர் தொலைவிற்கு செந்நிற, வெப்பம் மிகுந்த நெருப்பு குழம்பு வெளியேறி வருகிறது. இதனால் ஏற்பட்ட கரும்புகை மற்றும் சாம்பல், தலைநகர் மற்றும் பிற பகுதிகளுக்கு பரவியுள்ளன.

எரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 3,100 பேர் வெளியேறினர். இந்த எரிமலை வெடிப்பினால் லா ஆரோரா சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை மூடப்பட்டு உள்ளது.இதேபோல் அங்குள்ள கோல்ப் கிளப்பும் மூடப்பட்டது. அங்கிருந்த பணியாளர்கள் மற்றும் விருந்தினர்கள் வெளியேற்ற ப்பட்டுள்ளனர். இந்த எரிமலையில் இருந்து வெளிவரும் லாவாவின் வெப்பம் 700 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என கூறப்படுகிறது. காற்றில் ஏற்பட்ட மாற்றத்தினால் எரிமலை சாம்பல் தலைநகரின் பல பகுதிகளிலும் பரவியுள்ளது என்று கூறப்படுகிறது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img