வாஷிங்டன்: சிங்கப்பூரில் வரும் 12ம் தேதியன்று வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் உடனான சந்திப்பை அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று உறுதி செய்து அறிவித்தார். இருநாட்டு தலைவர்கள் சந்திப்பு குறித்து பேச திட்டமிடப்பட்ட சூழலில் திடீரென அந்த சந்திப்பை டிரம்ப் ரத்து செய்திருந்தார். ஆனாலும், பேச்சு வார்த்தைக்கு தயார் என அறிவித்து அதறகான முயற்சியை வடகொரியா தொடர்ந்து அமெரிக்காவுடன் பேசி வந்தது. இந்நிலையில், வடகொரியாவின் தூதர் கிம் யோங் சோல், அமெரிக்கா செயலாளர் மைக் போம்பியா உடன் பேச்சு வார்த்ைத நடத்தினார்.
அதன்பின் இரு நாட்களுக்கு பிறகு நியூயார்க்கிலிருந்து அமெரிக்கா அதிபரின் அதிகாரபூர்வ இடமான வெள்ளை மாளிகைக்கு சென்று அங்கு கிம் ஜாங்-உன் எழுதிய கடிதத்தை டிரம்பிடம் ஒப்படைத்தார். அதைதொடர்ந்து அங்குள்ள ஓவல் அலுவலகத்தில் நடத்திய சுமார் 2 மணிநேர பேச்சுவார்த்தைக்கு பின்னர், இரு நாட்டு தலைவர்க ளும் சிங்கப்பூரில் வரும் 12ம் தேதி சந்திக்க ஒப்புக்கொள்ளப்பட்ட விவரத்தை அதிபர் டிரம்ப் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்