img
img

இங்கிலாந்தில் இந்தியா, இலங்கை தொடர்பான 195 ஆவணங்கள் அழிப்பு
திங்கள் 28 மே 2018 13:54:01

img
லண்டன், 
 
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இங்கிலாந்து வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகத்தில் காலனி நாடுகள் பற்றிய முக்கிய ஆவ ணங்கள் சேகரித்து வைக்கப்படுவது வழக்கம். இதில் இங்கிலாந்து உளவு நிறுவனம், ராணுவத்தின் முக்கிய ஆவணங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில் அண்மையில் இந்தியா, இலங்கை தொடர்பான 195 முக்கிய ஆவணங்களை காமன்வெல்த் அலுவலகம் முற்றிலுமாக அழித்துவிட்டது.
 
இதில் 2 ஆவணங்கள் 1978 மற்றும் 1980-ம் ஆண்டுகளுக்கு இடையே விடுதலைப்புலிகளின் நெருக்கடி காரணமாக இலங்கை ராணுவத்துக்கு இங்கி லாந்து உளவு துறை மற்றும் ராணுவ பிரிவு அறிவுறுத்தல் வழங்கிய ஆவணங்கள் ஆகும். மேலும் 2 ஆவணங்கள் 1979-ம் ஆண்டு முதல் 1980 முடிய இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே இருந்த நட்புறவு தொடர்பானது.
 
இந்த ஆவணங்கள் அழிக்கப்பட்டதற்கு, வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இதுபற்றி வரலாற்று ஆராய்ச்சியாளர் பில் மில்லர் கூறுகையில் “முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆவணங்களை அழித்திருப்பதன் மூலம் வரலாற்றில் இனி இந்த ஆண்டுகளில் உள்ள தகவல்கள் குறித்து யாராலும் ஆய்வும் செய்ய முடியாதது” என்று கவலை தெரிவித்தார்.
 
ஆனால் ஆவணங்களை அழித்த காமன்வெல்த் அலுவலகமோ, “இங்கிலாந்தின் ஆவண கொள்கைப்படிதான் இவை அழிக்கப்பட்டு உள்ளன” என்று விளக்கம் அளித்துள்ளது.
பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img