வாஷிங்டன்,
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை இன்றி, இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாட்டினர் ‘எச்-1’ பி விசா பெற்று வேலை செய்கிறார்கள். அவர்களது வாழ்க்கை துணைவர்களுக்கு ‘எச்-4’ விசா வழங்கி, அங்கு பணி ஆற்றுகிற திட்டத்தை ஒபாமா, ஜனாதிபதியாக இருந்தபோது கொண்டு வந்தார். ஆனால் தற்போதைய டிரம்ப் நிர்வாகம், அமெரிக்காவில் அமெரிக்கர்களையே பணி அமர்த்த வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக உள்ளது. இதன் காரணமாக ‘எச்-1’ பி விசாவில் பணியாற்றுகிற ஆண்களின் மனைவிகளுக்கும், பெண்களின் கணவர்களுக்கும் ‘எச்-4’ விசா வழங்கி பணி ஆற்றுகிற வாய்ப்பினை தட்டிப்பறிக்க முடிவு செய்து உள்ளது.
இது தொடர்பான ஒரு வழக்கு, அமெரிக்க பெடரல் கோர்ட்டில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடர்பான முடிவு எடுக் கும் பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது என்று கோர்ட்டில் டிரம்ப் நிர்வாகம் (உள்நாட்டு பாதுகாப்பு துறை) ஒப்புக்கொண் டது. இறுதி முடிவு எடுத்த உடன், நிர்வாகம் மற்றும் பட்ஜெட் அலுவலகத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்படும் என கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.
ஒபாமா கொண்டுவந்த இந்ததிட்டம் பறிக்கப்பட்டுவிட்டால், இது இந்தியர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இது தொடர்பாக அமெரிக்க நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு அறிக்கையில், ‘எச்-4’ விசா பெற்று இருப்பவர்களில் 93 சதவீதம் பேர் இந்தியர்கள் என கூறப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்