img
img

நியூயார்க்கில் தலைப்பாகை அணிந்த முதல் பெண் காவல்துறை அதிகாரி
திங்கள் 21 மே 2018 16:01:39

img

நியூயார்க்: நியூயார்க் காவல் துறையில் முதன் முதலாக தலைப்பாகை அணிந்த சீக்கிய பெண் அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் காவல்துறையில் உள்ள சீக்கிய அதிகாரிகள் தலைப்பாகை அணிந்து கொள்ளவும், தாடி வளர்த்துக்கொள்ளவும் கடந்த 2016ம் ஆண்டு முதல் அனுமதி அளிக்கப்பட்டது.

நியூயார்க்கில் உள்ள போலீஸ் அகாடமியில் கடந்த வாரம் தனது பயிற்சியை நிறைவு செய்தவர் குர்சோச் கவுர் என்ற சீக்கிய பெண்,  நியூயார்க் காவல்து றையில் துணை நிலை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் நியூயார்க்கில் தலைப்பாகை அணிந்த முதல் பெண் காவல்துறை அதிகாரி என்ற ெபருமையை அவர் பெற்றுள்ளார். சீக்கிய பெண்களிடையே காவல்துறையில் சேரவேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டும் வகையிலும் நியூயார்க் காவல் துறை இதை செய்துள்ளது.

சீக்கிய அதிகாரிகள் அமைப்பு தனது டிவிட்டர் பக்கத்தில், “நியூயார்க் காவல்துறையில், தலைப்பாகை அணிந்த  முதல் முதல் துணை நிலை பெண் காவல் அதிகாரியை வரவேற்பத்தில் நாங்கள் பெருமை அடைகிறோம்” என்று பதிவிட்டுள்ளனர். மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறுகையில், “நியூயார்க் காவல்துறையில் சீக்கிய பெண் அதிகாரியை பார்ப்பதில் மகிழ்ச்சி. இது சீக்கியம் மற்றும் சீக்கியர்களை குறித்த நல்ல புரிந்துணர்தலை உருவாக்கும் என்று நம்புகிறேன்” என பதிவிட்டுள்ளார். 

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img