img
img

புலிகளின் தமிழ் ஈழ கொள்கை இன்னும் உயிருடன் இருக்கிறது
திங்கள் 21 மே 2018 15:57:41

img

கொழும்பு

 ‘‘விடுதலைப் புலிகள் அமைப்பு ராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டு 9 ஆண்டுகள் ஆன போதும், அதன் தமிழ் ஈழ கொள்கை இன்னும் உயிருடன்தான் இருக்கிறது’’ என்று இலங்கை அதிபர் மைதிரிபாலா சிறிசேனா கூறியுள்ளார். இலங்கையில் தனித்தமிழ் ஈழம் கோரி விடுதலைப் புலிகள் 37 ஆண்டு களுக்கு மேலாக நடத்தி வந்த போராட்டம், 2009ம் ஆண்டு, மே 18ம் தேதி நடந்த இறுதிப்போரில் முடிவுக்கு வந்தது. அன்றைய தினம், முள்ளி வாய்க்காலில் நடந்த ராணுவ நடவடிக்கையில் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார். இந்த தினத்தை இலங்கை அரசும், ராணு வமும், போரில் கொல்லப்பட்ட வீரர்களின் நினைவு தினமாக அனுசரித்து வருகின்றன.

அதே நேரம், தமிழர்கள் இந்த தினத்தை துக்க தினமாக அனுசரித்து வருகின்றனர். புலிகள் - ராணுவம் இடையே இறுதிப் போர் நடைபெற்ற முள்ளி வாய்க்கால் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் திரண்டு, போரில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தி னர். இதில், வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் மட்டுமே கலந்து கொண்டார். மற்ற இலங்கை தமிழ் தலைவர்கள் யாரும் கலந்து கொள்ள வில்லை. 

இதில் பேசிய விக்னேஸ்வரன், இனிவரும் ஆண்டுகளில் மே 18ம் தேதி ‘தமிழர் படுகொலை தினமாக’ அனுசரிக்கப்படும் என அறிவித்தார். இந்நிலை யில், இறுதிப் போரின் 9ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கொழும்புவில் அரசு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிபர் மைதிரிபாலா சிறிசேனா கலந்து கொண்டார். அதில் அவர் பேசுகையில், ‘‘விடுதலைப் புலிகள் அமைப்பு ராணுவ ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தோற்டிக்கப்பட்டு 9 ஆண்டுகள் கடந்த போதிலும், அதன் கொள்கைகள் இன்னும் உயிருடன்தான் இருக்கின்றன.

இந்த அமைப்பின் சர்வதேச ஏஜென்ட்டுகள், இப்போதும் தமிழ் ஈழம் உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். விடுதலைப் புலிகள் அமைப்பு இப்போதும் இலங்கை அரசுக்கு சவாலாக இருக்கிறது. இந்த அமைப்பின் ஆதரவாளர்கள் லண்டனில் சமீபத்தில் நடத்திய போராட்டத்தில் இருந்து இது தெரிகிறது. எனவே, விடுதலைப் புலிகளின் கொள்கைகளை தோற்கடிக்க, அரசுக்கு இலங்கை மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்’’ என்று அழைப்பு விடுத்தார்.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img