img
img

டெனால்ட் டிரம்ப் வடகொரியா அதிபர் கிம் ஜோங் சந்திப்பு ஜூன் 12 ந்தேதி உறுதி
வெள்ளி 11 மே 2018 16:42:31

img
வாஷிங்டன்
 
அமெரிக்கா அதிபர் டெனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் சந்தித்து பேச இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகின. ஆனால் இருவரும் சந்தித்து பேசுவதற்கான தேதி மற்றும் இடம் முடிவு செய்யப்படாமலே இருந்தது. இந்நிலையில் கடந்த 4ம் தேதி வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரியா அதிபர் கிம் ஜாங்கை சந்தித்து பேசுவதற்கான தேதி மற்றும் இடம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில் ஜூன் 12ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறவுள்ள மாநாட்டில், கிம் ஜாங் உன் உடன் சந்திப்பு நடைபெற ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 
தென்கொரியா-வுக்கும் வட கொரியாவுக்கும் இடையில் நிலவி வந்த பதற்றம் அடிப்படையான சிக்கலாக இருந்த நிலையில், வட கொரியா - தென் கொரியா உறவில் பதற்றம் தனியத் தொடங்கியது. பகைமை பாராட்டிவந்த இரண்டு சகோதர நாடுகளும் கூட்டாக ஒரே கொடியின் கீழ் குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்றன. கிம் ஜோங்-உன்னின் சகோதரி தென்கொரியா சென்று வந்தார். அமெரிக்கா சென்ற தென் கொரிய அதிகாரிகள் முதலில் கிம் விடுத்த நேரடிப் பேச்சுக்கான அழைப்பை டிரம்ப் ஏற்றுக்கொண்டதை உறுதி செய்தனர். பிறகு இதை உறுதி செய்து டிரம்ப் டிவீட் செய்தார்.
 
சிங்கப்பூருக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நெருக்கமான நட்புறவு இருக்கிறது. அதே நேரம் சிங்கப்பூர்-வட கொரியா இரு நாடுகளுக்கும் இடையில் தூதரக உறவுகள் உள்ளன. ஆனால், வடகொரியா அடுத்தடுத்து நடத்திய அணு ஆயுத மற்றும் ஏவுகணைச் சோதனைகளைத் தொடர்ந்து சர்வதேசத் தடைகள் கடுமையானபின், வடகொரியாவுடனான எல்லா வர்த்தக உறவுகளையும் சிங்கப்பூர் துண்டித்துக்கொண்டது.
 
உயர்மட்ட ராஜீய நிகழ்வுகளை நடத்துவதற்கு சிங்கப்பூர் அவ்வப்போது தேர்ந்தெடுக்கப்படுகிறது. 2015ம் ஆண்டு, சீனா மற்றும் தைவான் நாடுகளின் தலைவர்கள் 60 ஆண்டுகளில் முதல் முறையாக சந்தித்துப் பேசிய நிகழ்வும் சிங்கப்பூரில்தான் நடந்தது.
பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img