காபூல்,
ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வரக்கூடிய தலீபான் பயங்கரவாதிகள், போலீசார், ராணுவ வீரர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை குறிவைத்து தாக்கு தல் நடத்துவதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர்.
இந்நிலையில் கந்தகார் மாகாணத்தில் பாகிஸ்தான் நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள மரோப் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை போலீசார் வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் போலீசாரின் வாகனங்களை குறிவைத்து சரமாரியாக துப்பா க்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து, சுதாரித்துக்கொண்ட போலீசார் உடனடியாக பதில் தாக்குதலை தொடுத்தனர்.
இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நடந்தது. பயங்கரவாதிகள் சுட்டதில் போலீஸ் அதிகாரிகள் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரி தாபமாக உயிர் இழந்தனர். மேலும் 9 போலீசார் படுகாயம் அடைந்தனர்.அதே சமயம் பயங்கரவாதிகள் தரப்பில் 15 பேர் பலியாகினர். மேலும் 11 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு தலீபான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது.