ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ரோஸ்மவுண்ட் ஆஸ்திரேலியாவின் பேஷன் வீக் என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை பிரபல நீச்சல் உடை தயாரிப்பு நிறுவனமான லிசா புளூ ஏற்பாடு செய்துள்ளது. அப்போது அந்த நிறுவனத்தின் புதிய நீச்சல் உடைகளை அழகிகள் அணிந்து கொண்டு நடந்து வந்தனர்.
அதில் ஒரு பெண்ணின் உடையில் மட்டும் இந்து கடவுளான லட்சுமியின் உருவம் பதிக்கப்பட்டிருந்தது. மேல் சட்டை, கால் சட்டை இரண்டிலும் லட்சுமியின் படம் இடம்பெற்றதால், இதைக் கண்ட இந்து மதத்தினர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் இந்து அமைப்புகள் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ஆஸ்திரேலிய கொடிகளை எரித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.
அந்த போராட்டத்தில் இந்து கடவுளின் படம் பதித்த உள்ளாடைகளின் விளம்பரம், விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட நிறுவனம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதையடுத்து லிசா புளூ நிறுவனம் மன்னிப்பு கேட்டதுடன் இந்து கடவுள் படம் பதிந்த உள்ளாடைகள் விற்கப்படாது என்றும் தெரிவித்துள்ளது.
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்