லண்டன்,
இளவரசர் வில்லியம்-கேட் மிடில்டன் தம்பதியரின் 3வது குழந்தைக்கு லூயிஸ் ஆர்தர் சார்லஸ் என பெயரிடப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரி விக்கப்பட்டுள்ளது.
லண்டன் இளவரசர் சார்லஸ் – அமரர் டயானா தம்பதியினரின் மூத்த மகன் இளவரசர் வில்லியம் ஆவார். இவரது மனைவி கேட் மிடில்டன். இவர்க ளுக்கு ஏற்கனவே ஜார்ஜ் என்ற மகனும், சார்லட் என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் மூன்றாவதாக இவர்களுக்கு ஆண்குழந்தை ஒன்று பிறந்தது.இது குறித்து பிரிட்டன் அரச குடும்பத்தின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில், ஏப்ரல் 23ம் தேதி, பிரிட்டன் நேரப்படி காலை 11.01 மணிக்கு கேட் மிடில்டனுக்கு அழகான ஆண்குழந்தை பிறந்துள்ளதாகவும், அதன் எடை 8 பவுண்ட் 7 அவுன்ஸ் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அந்தக் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப்படும் என கேள்வி இங்கிலாந்து மக்களிடையே எழுந்தது. ஆல்பர்ட் என பெயர் வைக்கப்ப டும் என பலரும் எதிர்பார்த்த நிலையில், குழந்தைக்கு பிரின்ஸ் லூயிஸ் ஆர்தர் சார்லஸ் என்று பெயர் சூட்டியுள்ளனர். மேலும், குழந்தை ஹிஸ் ராயல் ஹைனஸ் பிரின்ஸ் லூயிஸ் ஆப் கேம்பிரிட்ஜ் என்றே அழைக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
புதிதாக பிறந்த குட்டி இளவரசருக்கு பிரிட்டன் பிரதமர் தெரேசா மே, கனடா பிரதமர் ஜஸ்டின், மிட்சேல் ஒபாமா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்