பெய்ஜிங்,
சீனாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது ஷாங்ஷி மாகாணம். இங்குள்ள மிசி கவுண்டியில் பள்ளிக்கூடம் ஒன்றில் நடந்த கத்திகுத்து தாக்குதலில் 9 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.
நேற்று பள்ளி முடிந்து மாணவர்கள் வெளிவரும்போது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென தன்னிடம் இருந்த கத்தியால் மாணவர்களை சரமாரியாக தாக்கினார். இதனால் மாணவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இந்த தாக்குதலில் 9 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும், 12 க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார் காயமடைந்த மாணவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்து உள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் தாக்குதல் நடத்தியவர் முன்னாள் பள்ளி மாணவர் என்பது தெரிய வந்ததுள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவம் பழிவாங்குதலுக்காக நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் மாணவர்களுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் எதிரான வன்முறையைத் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பல பள்ளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக, சீனா தனிநபர் துப்பாக்கி வைத்திருக்கும் உரிமைக்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இருந்த போதும் அங்கு வன்முறை குற்றங்கள் மற்றும் வெடிகுண்டு சம்பவங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்