செவ்வாய் 23, ஏப்ரல் 2024  
img
img

ஒரே நேரத்தில் 140 குழந்தைகள் நரபலி கொடுத்த கொடூரம்!
சனி 28 ஏப்ரல் 2018 17:13:37

img
பெரு நாட்டின் லாஸ் லாமாஸ் பபகுதியில்ட்ரு ஜிலோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்பொருள் பேராசிரியர் கேப்ரியல் ப்ரிடோ மற்றும் அமெரிக்கா வைச் சேர்ந்த ஜான் வெரானோ உள்ளிட்டோர் அடங்கிய சர்வதேச ஆராய்ச்சி குழு ஆய்வு நடத்தியது. நேஷனல் ஜியோகிரஃபிக் சொசைட்டி உதவியுட னான   இந்த தொல்பொருள் ஆய்வு 2011-ம் ஆண்டு துவங்கியுள்ளது. 
 
இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் முதன் முதலில் கடந்த வியாழன் கிழமையன்று  நேஷனல் ஜியோகிரஃபிக் இணையத்தளத்தில்  வெளியிடப்பட்டது. அதில், ஆய்வின் பொது கிடைத்த எலும்புகள், மண்டை ஓடு ஆகியவற்றை கார்பன் பரிசோதனை செய்ததில், சுமார் 550 ஆண்டுகளுக்கு முன்பு, (கி.பி 1450-ம் ஆண்டு காலகட்டத்தில்) ஒரு மாபெரும் நரபலி நிகழ்வு நடந்திருப்பதாக கூறப்பட்டு உள்ளது.
 
இந்த் ஆய்வில் 5-14 வயதுக்கும் உட்பட்ட சுமார் 140 குழந்தைகளின் எலும்புகளை கண்டுபிடித்துள்ளனர். இத்துடன் 200 இளம் ஒட்டகங்களின் எலும்புக ளையும் கண்டுபிடித்துள்ளனர். குழந்தைகளுடன் இந்த ஒட்டகங்களும் நரபலி கொடுக்கப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.
 
இதுபோன்றே கடந்த 2011-ம் ஆண்டு, இதே இடத்தில் சுமார் 3,500 ஆண்டுகள் பழைமையான கோயிலில் நடத்திய தொல்பொருள் ஆய்வில்,  40 மனி தர்கள் மற்றும் 74 ஒட்டகங்களின் எலும்கபுளை கண்டுபிடித்தனர். மேலும், பெரு நாட்டில் கண்டுபிடித்துள்ள இந்த நரபலிதான் உலக வரலாற்றிலேயே அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் நரபலி கொடுக்கப்பட்ட நிகழ்வாக இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img