மாஸ்கோ
சிரியாவில் தொடர்ந்து தாக்குதல் நடந்து வரும் இந்த நேரத்தில் அதை ஊக்குவிக்கும் செயலாக இது பார்க்கப்படுகிறது.செர்கி கூறுகையில், சிரிய ராணு வத்தினருக்கு நன்றாக பயிற்சியளிக்கவும், குறிப்பாக புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் குறித்து அவர்களுக்கு நன்றாக விளக்கமளிக்கப்படும். இது சம்மந்தமாக சக்திவாய்ந்த S-300 ரக ஏவுகணைகளை ரஷ்யா சிரியாவுக்கு விரைவில் வழங்கும் என கூறியுள்ளார்.
ரஷ்யா ஏவுகணையை சிரியாவுக்கு அளிக்கும் விஷயம் இஸ்ரேலுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், இஸ்ரேல் சிரிய இராணுவ தளங்களை தாக்குவதை, S-300 ஏவுகணைகள் தடுக்கும் என அந்நாடு அஞ்சுகிறது, மேலும், இது யூத அரசிற்கு ஆபத்து விளைவிக்கும் எனவும் இஸ்ரேல் நினைக்கிறது. சிரியா கையில் அந்த ஏவுகணை வந்தால், அந்நாட்டிடம் இதுவரையில்லாத வகையிலான முன்னேறிய ஆயுதங்களின் அமைப்பாக அது இருக்கும் என கூறப்படுகிறது. இதனிடையில் எங்கள் விமானங்களை யாராவது சுட்டால், அவர்களை அழித்து விடுவோம் என இஸ்ரேல் ராணுவ அமைச்சர் அவிக்டோர் லிபர்மென் சில தினங்களுக்கு முன்னர் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.