டமாஸ்கஸ்
சிரியாவில் அமெரிக்கா சமீபத்தில் தாக்குதல் நடத்தியது. இதற்கு ரஷ்யா தனது கண்டனங்களை தெரிவித்தது. இந்நிலையில் ரஷ்யா மற்றும் சிரியா மீது அமெரிக்காவின் சிறப்பு ராணுவ குழுத் தலைவர் ரைமண்ட் தாமஸ் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அவர் கூறுகையில், ரஷ்யா தனது மின்னணு ஆயுதங்கள் மூலம் சிரியாவில் உள்ள அமெரிக்க படைகளை தினமும் தாக்குகிறது. முக்கியமாக சக்திவாய்ந்த எங்களின் EC-130 போர் விமானத்தை முற்றிலும் முடக்க ரஷ்யாவும், சிரியாவும் சேர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. அதே போல அமெரிக்கா வுக்கு சொந்தமான கண்காணிப்பு வானூர்திகளையும் குறிவைத்து தாக்குகிறார்கள்.
சிரியாவில் உள்ள எங்களின் முக்கிய ஆயுதங்களை அழிக்கவே இவ்வாறு ரஷ்யா செய்கிறது. இதோடு ரஷ்யா தாங்கள் எதிர்காலத்தில் பயன்படுத்தும் ஆயுதங்களை சோதனை செய்யவும் இவ்வாறான செயல்களில் ஈடுபடுகிறார்கள் என குற்றஞ்சாட்டியுள்ளார்.