நைஜீரியா தேவாலயத்தில் நடத்தப்பட்ட துப்பாக்குச்சூடு தாக்குதலில் 19 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டுள்ளனர்.
நைஜீரியாவில் அதிபர் முகமது புகாரி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்குள்ள பழங்குடியின முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவ மக்களுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது. 2013-ம் ஆண்டு முதல் இங்கு மோதல் நடைபெற்று வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் அவ்வப்போது செய்தி வெளியிட்டு வந்துள்ளன.
அந்நாட்டில் புலானி என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்த முஸ்லீம்கள் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகின்றனர். மேலும், அங்குள்ள கிறிஸ்துவர்கள் விவசாயம் செய்துவருகின்றனர். இந்தப் பிரச்னை, நிலங்களில் ஆடுகளை மேய விடுவது பற்றிய விவகாரத்தில் தொடங்கி இப்போது பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது.
இந்நிலையில், நைஜீரியாவின் கிழக்கு க்வெர் பகுதியில் உள்ள செயின்ட் இக்னேசியஸ் என்ற தேவாலயத்தில் நேற்று அதிகாலை வழிபாடு நடத்து வதுக்காக அப்பகுதி மக்கள் சென்றுள்ளனர். அப்போது அங்கு எதிர்பாராதவிதமாக உள்ளே நுழைந்த புலானி இனத்தைச் சேர்ந்தவர்கள் தங்களின் கைகளில் வைத்திருந்த துப்பாக்கியால் தேவாலயத்தில் இருந்தவர்களைச் சரமாரியாகச் சுட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் மத போதகர்கள் இருவர் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் தீய ணை ப்புத் துறையினர் மிகவும் துரிதமாக மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதே போன்று கடந்த சில வாரங்களுக்கு முன்னர், புலானி இனத்தவர்கள், கிறிஸ்துவர்களின் 50 வீடுகளுக்குத் தீவைத்து எரித்துள்ளனர். மேலும், இந்த இருபிரிவினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் சுமார் 72 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்