ஒட்டாவா: கனடாவில் மக்கள் கூட்டத்திற்குள், கல்லூரி மாணவர் வேன்னை தாறுமாறாக ஓட்டியதில் 10 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். டொரண்டோவில் நெரிசல் மிகுந்த சாலையில் நண்பகல் வேலையில் இந்த கோர தாக்குதல் அரங்கேறியுள்ளது. அப்போது மதிய உணவு இடைவேளி என்பதால் சாலையில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்துள்ளது. வேன் தங்களை நோக்கி வருவது அறிந்த பாதசாரிகள் நான்கு பக்கமும் சிதறி ஓடினர்.
அவர்களில் 10 பேர் சக்கரங்களில் சிக்கி உயிரிழந்தனர். காயத்துடன் மீட்க்கப்பட்ட 15 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் சுற்றி வலைத்ததும் தம்மை சுட்டுக் கொல்லுமாறு ஆக்ரோஷமாக கூறிய வேன் டிரைவர், பின்னர் சரண் அடைந்தார். விசாரணையில் அவரது பெயர் அலக் மினாசியன் என்பதும் அவர் கல்லூரி மாணவர் என்றும் தெரிய வந்தது. தாக்குதலுக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை என்றாலும் பயங்கரவாத இயக்கங்களுக்கு தொடர்பில்லை என்று கனடா புலனாய்வு துறை தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்