பிஜீங்,
அமெரிக்க சீனா நாடுகளுக்கிடையே ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாகும் பொருட்களுக்கு அதிக சுங்க வரிகளை விதித்து இரு நாடுகளும் வர்த்தக ரீதியாக குற்றம் சாட்டி வருகின்றன. மேலும் இவ்வாறு கூடுதல் சுங்க வரி விதிப்பதினால் இரு நாடுகளின் வர்த்தக நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்ப ட்டுள்ளன.
இருதரப்பிலும் மேற்கொள்ளபடும் வரிவிதிப்பு நடவடிக்கைகள் காரணமாக சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான உறவில் விரிசல்களை ஏற்படுத்தி வருகின்றன. மேலும் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மறைமுக வர்த்தக போர் நடந்து வருகிறது.
இந்நிலையில் சீனாவின் ஹர்வார்டு பல்கலைகழகத்தின் பேர்பாங்க் மையம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சீன அமெரிக்க தூதர் குய் திங்காய், அமெரிக்காவுடனான வர்த்தக நடவடிக்கை குறித்து கூறுகையில், ”வர்த்தக போரானது அமெரிக்க- சீன உறவுக்கு இடையே ஒரு விஷமாய் அமைந்துள்ளது. எந்த ஒரு பிரச்சினையையும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண முடியும்.
ஆனால், வர்த்தக போரை தொடங்க அமெரிக்கா வலியுறுத்தினால் அதற்கு சீனா தக்க பதிலடி கொடுக்கும்” எனக் கூறினார். இத்தகவலை சீன நாட்டின் செய்தி நிறுவனமான சின்குவா வெளியிட்டுள்ளது.