முள்ளிவாய்க்கால் முன்பள்ளி ஒன்றில் கல்வி கற்கும் 5 வயது சிறுவன், 681 வது படைப்பிரிவு இராணுவ கட்டளை தளபதியிடம் தனக்கு ஏ கே 47 துப்பாக்கி வேண்டும் என்று கேட்டுள்ளான்.முள்ளிவாய்க்கால் கிழக்கு சந்திரன் முன்பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு விழா முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் நடைபெற்றது.அதில் கௌரவ விருந்தினராக கலந்து கொண்ட முள்ளிவாய்க்கால் மேற்கு 681 ஆவது படைப்பிரிவு இராணுவ தளபதி மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கினார்.
குறித்த முன்பள்ளிக்கு சென்ற இராணுவத் தளபதி, அங்கிருந்த சிறுவர்களிடம் விளையாட்டு பொருள்கள் என்ன வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு சிறுவன் ஒருவன் ஏ கே 47 துப்பாக்கி ஒன்று எனக்கு தேவை என்று கேட்டுள்ளார். அவர் எதிர்பாராத விதமாக சிறுவனின் பதில் அமைந்திருந்ததால், அந்த சிறுவனை அழைத்த இராணுவத்தளபதி மாற்றுப்பொருள் ஏதேனும் ஒன்றை கேட்கும்ப டி அன்பாக பணித்துள்ளார்.
உடனே சிறுவன் தனக்கு கெலிகொப்டர் ஒன்று தேவை என்று கூறியுள்ளான்.விளையாட்டு விழாவில் கௌரவ விருந்தினராக கலந்து கொண்ட 681 வது படைப்பிரிவு இராணுவ கட்டளை தளபதி குறித்த சிறுவனை அழைத்து முச்சக்கர வண்டி விளையாட்டுப் பொருளை சிறப்புப் பரிசாக வழங்கியுள்ளார். அதேவேளை அனைத்து முன்பள்ளி மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான (விளையாட்டு) பொலிஸ் வாகனங்களை பரிசாக வழங்கியுள்ளதாக சந்திரன் முன்பள்ளி ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்