அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ.புஷ்-ஷின் மனைவி பார்பரா புஷ் காலமானர்.
அமெரிக்காவின் 41-வது அதிபர் ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ புஷ்-ஷின் மனைவியும், 43-வது அதிபர் ஜார்ஜ் புஷ்-ஷின் தாயுமான பார்பரா புஷ், உடல் நலக்குறைவால் தனது 92-வது வயதில் காலமானார். நியூயார்க் நகரத்தில், 1925 ஜூன் 8-ம் தேதி பார்பரா பியர்ஸாக புஷ் பிறந்தார். அவர் 1945-ம் ஆண்டில், ஜார்ஜ் புஷ்-ஷை திருமணம் செய்து கொண்டார். 1989 முதல் 1993 வரை அமெரிக்காவின் முதல் குடிமகளாக இருந்துள்ளார். மேலும் இவர் அமெரிக்காவின் முதல் குடிமகளாக இருந்தபோது, உலகளாவிய கல்வியறிவு செயல்களை முன்னெடுக்க ஒரு அறக்கட்டளையும் நிறுவியுள்ளார்.
பார்பரா புஷ் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை உயிரிழந்தார். இந்தத் தகவலை புஷ் குடும்பத்தின் செய்தித் தொடர்பா ளர் ஜிம் மெக்ராத் உறுதிப்படுத்தியுள்ளார். பார்பராவின் இறுதிச் சடங்குகள்குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரி வித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 15-ம் தேதி, ஜிம் மெக்ராத் தனது டிவிட்டர் பக்கத்தில் பார்பராவின் உடல் நிலைகுறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், 'பார்பரா புஷ் தொடர்ச்சியான மருத்துவ சிகிச்சையை விரும்பவில்லை. தற்போது அவருக்கு குடும்பத்தினரின் ஆறுதல் மட்டுமே தேவைப்படுகிறது. அவர் இரும்பு பெண். உடல் நிலைபற்றி அவருக்கு கவலையில்லை” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்