பிரான்ஸ் நாட்டில் அலுவலக வேலைக்காரணமாக பெண்கள் 40 வயதில் கர்ப்பம் அடைவது அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த Insee என்ற ஏஜென்ஸி அண்மையில் பெண்களின் ஆரோக்கியம் குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இதில், 2015ம் ஆண்டில் பிறந்த ஒவ்வொரு 20 குழந்தைகளில் ஒரு குழந்தையின் தாயார் தனது 40 வயதிற்கு மேல் கர்ப்பம் தரிப்பதாக தெரியவந்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டில் மட்டும் பிரான்ஸ் நாட்டில் 7,99,000 குழந்தைகள் பிறந்துள்ளன. இவர்களில் 5 சதவிகித தாயார்கள் 40 வயதுக்கு மேல் தான் கர்ப்பம் அடைந்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் 4 சதவிகிதமாக இருந்த இந்த எண்ணிக்கை தற்போது 5 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் பெண்கள் கர்ப்பம் தரிப்பது சராசரியாக 30.3 வயதாகும். ஆனால், தற்போது பிறப்பு விகிதம் 2.4 சதவிகிதம் வரை குறைந்துள்ளதும் இதற்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. இது மட்டுமில்லாமல், பிரான்ஸ் நாட்டில் 20-களில் பெண்கள் அலுவலக பணிக்கு செல்ல தயாராகி விடுவதால், அந்த வேலைப்பளுவை எதிர்க்கொள்ள முடியாமல் கர்ப்பம் தரிக்கும் வயதை தள்ளி போடுவதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், 40 வயதிற்கு மேல் பெண்கள் கர்ப்பம் தரிப்பது குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்க வாய்ப்புள்ளது எனவும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்