img
img

அமெரிக்காவின் தாக்குதல் சர்வதேச சட்டங்களை மீறிய செயல்: கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: ரஷ்யா எச்சரிக்கை
சனி 14 ஏப்ரல் 2018 17:33:32

img
மாஸ்கோ,
 
சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. இங்கு அதிபர் பஷார் அல் அசாத்துக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் ஐஎஸ் தீவிரவாதிகள் ஆதரவுடன் போரிட்டு வருகின்றனர். இந்த மூன்று தரப்பினருக்கும் இடையிலான சண்டையில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் நாள்தோறும் கொல்லப்படுகின்றனர். சிரியா அரசுக்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருகிறது.
 
இந்நிலையில், கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த கிழக்கு கட்டா பகுதியில் இருந்த டூமா நகரை சிரியா அரசுப் படைகள் கடந்த வாரம் மீண்டும் கைப்பற்றின. இந்த கைப்பற்றலின்போது, கடந்த 7-ம் தேதி சந்தேகத்திடமான வகையில் ரசாயன குண்டுகளை வீசி சிரிய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் குழந்தைகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
 
இதையடுத்து, சிரியாவுக்கு ஆதரவாக இருக்கும் ரஷ்யா ரசாயான ஆயுதத் தாக்குதலை தடுக்கவில்லை, ஆதரவாக இருக்கிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டினார். சிரியாவில் உள்ள ரசாயான ஆயுதங்களை அழிக்க அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்று அறிவித்திருந்தார்.
 
இதையடுத்து, சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத்துக்கு எதிராகவும், அவரின் அரசு வைத்திருக்கும் ரசாயன ஆயுதங்களை அழிக்கும் வகையில் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாட்டு ராணுவம் நேற்று இரவு முதல் வான்வழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளன. இதனால் சிரியாவில் போர் மேகம் சூழ்ந்துள்ளது. சிரியா மீது நடத்தும் இந்தத் தாக்குதலில் ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகள் தலையிடக்கூடாது. சிரியாவுக்கு ஆதரவாகவும் களமிறங்கக்கூடாது என்று டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். அமெரிக்காவுக்கு ஆதரவாக பிரான்சு, இங்கிலாந்து பிரதமர் தெரசாமே ஆகியோரும் அறிக்கை வெளியிட்டுள்ளனர். 
 
இந்த நிலையில், அமெரிக்காவின் தாக்குதல் சர்வதேச சட்டங்களை மீறிய செயல் என்று தெரிவித்துள்ள ரஷ்யா, கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. 
பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img