மும்பை
சென்னையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரையில் ஐ.பி.எல். போட்டிகளை அனுமதிக்கமாட்டோம் என போராட்டம் நடைபெற்றது. போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர். மைதானத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதற்கிடையே சென்னையில் மேற்கொண்டு 6 போட்டிகளை நடத்தவிட மாட்டோம் என போராட்டக்காரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சென்னை போலீசாரும் ஐபிஎல் போட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என தெரிவித்தனர்.
சென்னையில் நடைபெற உள்ள போட்டிகளை வேறு இடங்களுக்கு மாற்றம் முடிவு செய்யப்பட்டது.இந்த நிலையில் ஐபிஎல் போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் நடக்கவிருந்த 6 போட்டிகளுக்கான டிக்கெட் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். ஏப். 14ம் தேதியிலிருந்து 20ம் தேதிக்குள் பெற்றுக்கொள்ளலாம் என ஐபிஎல் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.ஆனால் தற்போது புனேவிலும் சென்னை ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது
தண்ணீர் பற்றாக்குறை உள்ள புனேவில் கிரிக்கெட் மைதானத்துக்கு தண்ணீர் எப்படி வழங்க முடியும் என மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்திற்கு மும்பை நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.