இஸ்லமாபாத்,
வரி ஏய்ப்பு செய்யும் நோக்கத்தில், பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த பிரபலங்கள் வெளிநாடுகளில் சட்ட விரோத கருப்பு பண பரிமாற்றங்கள் செய்துள்ளனர். பெருமளவில் சொத்துகளை வாங்கி குவித்துள்ளனர். ரகசிய வங்கி கணக்குகளில் டெபாசிட்டுகளும் செய்துள்ளனர்.
இது தொடர்பான ரகசிய ஆவணங்களை சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பு ‘பனாமா லீக்ஸ்’ என்ற பெயரில் வெளியிட்டு, உலக அரங்கை பரபரப்பாக்கியது. இந்த ஊழல் ‘பனாமா கேட் ஊழல்’ என அழைக்கப்படுகிறது. 1990-களில் நவாஸ் ஷெரீப் இருமுறை பிரதமர் பதவி வகித்த போது, சட்டவிரோத பண பரிமாற்றங்களில் ஈடுபட்டதாகவும், லண்டனில் 4 சொகுசு அடுக்கு மாடி குடியிருப்புகள் வாங்கியதாகவும் பனாமா ஆவண கசிவில் தகவல் வெளியானது. இதையடுத்து, நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கூட்டு விசாரணைக்குழு அமைத்து நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான ‘பனாமா’ ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டது. நவாஸ் ஷெரீப்பின் பிரதமர் பொறுப்பும் பறிக்கப்பட்டது. இந்த சூழலில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்