img
img

சமூகவலைதளம் மூலம் நட்பாகி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டாக்டர் கைது
செவ்வாய் 10 ஏப்ரல் 2018 13:13:06

img
அமெரிக்காவில் மருத்துவர் ஒருவர் 15 வயது சிறுமியுடன் பாலியல் உறவு கொள்வதற்காக 1,300 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏஞ்சலோ டிரிகோஸா ஜாரா (29) என்பவர் ஒகலகோமா மாநிலத்தில் மருத்துவராக  பணியாற்றி வருகிறார். இவர் இணையதளம் வாயிலாக புளோரிடாவில உள்ள 15 வயது சிறுமியுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார்.
 
அந்த சிறுமியிடம் தனது வயது 23 என தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் வீடியோ கால் மூலம் பேசி வந்துள்ளார். அதன்பின்னர் ஸ்னாப்சாட் மூலம் பல மணிநேரம் உரையாடியுள்ளனர். நாட்கள் செல்ல ஆபாசமான புகைப்படங்களை சிறுமிக்கு அனுப்பியுள்ளார் இதற்கிடையில் இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்துக்கொள்ள முடிவு செய்தனர், அதன்படி ப்ளோரிடாவுக்கு சென்ற இந்த மருத்துவர், சிறுமியின் வீட்டிற்குச் சென்று சிறுமியை அழைத்துக்கொண்டு, ஹொட்டல் ஒன்றில் வைத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
 
பின்னர், அங்கிருந்து திரும்பிய பின்னரும் இவர் தனது உரையாடலை தொடர்ந்து கொண்டு தான் இருந்துள்ளார். இந்நிலையில், மீண்டும் சிறுமியுடன் பாலியல் உறவு கொள்ள, புளோரிடா பயணிக்கையில் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். இவர்கள் உறவு குறித்து அறிந்து கொண்ட தாய், அளித்த புகாரின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது சட்டவிரோதமான பாலியல் செயல் என்ற குற்றசாட்டின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். விசாரணை நடைபெற்று வருகின்ற நிலையில், விரைவில் தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு தன்னுடன் பயின்ற சக மருத்துவ மாணவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img