img
img

விண்வெளியில் ஆடம்பர ஓட்டல்
சனி 07 ஏப்ரல் 2018 13:44:26

img
நியூயார்க்
 
பூமிக்கு வெளியே விண்வெளியில் ''அரோரா ஸ்பேஸ் ஸ்டேஷன்'' என்ற சொகுசு ஹோட்டல் மக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட உள்ளது. ''ஓரியன் ஸ்பேன்'' என்ற புதிய ஸ்பேஸ் நிறுவனம் இந்த திட்டத்தை கையிலெடுத்து உள்ளது.இன்றில் இருந்து இதற்கான பணிகள் தொடங்கும். 2021ல் கட்டுமான பணிகள் மொத்தமாக முடிந்து, 2022ல் மக்கள் இந்த ஓட்டலில் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
 
384 தடவை சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தை  கண்டு ரசிக்கலாம். பூமியில் இருந்து தக்க பயிற்சி கொடுக்கப்பட்ட பின் மனிதர்கள் இந்த ஓட்டலுக்கு அழைத்து செல்லப்படுவார்கள். இதற்காக மிகவும் பாதுகாப்பான முறையில் இயங்கும் ராக்கெட் வடிவமைக்கப்படும் என்று அந்நிறுவனத்தின் முதன்மை செயலதிகாரி பிராங்க் பங்கர் தெரிவித்துள்ளார்.
 
இந்த அரோரா ஸ்பேஸ் ஸ்டேஷன் பெரிய ஜெட் ராக்கெட் போல இருக்கும். இதன் நீளம் 43.5 அடியும், அகலம் 14.1 அடியும் இருக்கும். இதன் கொள்ளளவு 5,650 கன அடி இருக்கும். இது மக்கள் தங்குவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு அமைக்கப்பட உள்ளது. இந்த ஸ்பேஸ் ஸ்டேஷனில் ''ஓரியன் ஸ்பேன்'' நிறுவனத்தின் அலுவலகமும் கட்டப்படும்.
 
இதில் 20 பேர் வரை ஒரே சமயத்தில் தங்க முடியும். இதில் படங்களில் காட்டுவது போல மிதந்து கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சாதாரண பூமியில் இருக்கும் பகுதி போலவே இதில் செயற்கை புவியீர்ப்பு விசை உருவாக்கப்பட்டு இருக்கும். இதனால் இங்கு தாங்கும் நபர்களுக்கு பெரிய அளவில் பயிற்சி தேவை இல்லை.
 
பூமியில் இருந்து 320 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த ஸ்பேஸ் ஸ்டேஷன் கட்டப்பட உள்ளது. இவ்வளவு தூரத்தில் இதுவரை ஒரு ஓட்டல் கட்டப்பட்டது இல்லை. இதற்கான புக்கிங் எப்போது தொடங்கும் என்றும், இதற்கான செலவு எவ்வளவு என்று கூறப்படவில்லை.
பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img