img
img

நீங்கள் செய்வது சர்வாதிகாரம் !'-யூடியூப் தலைமையகத்திலேயே பெண்ணின் துப்பாக்கிக் கலகம்
வெள்ளி 06 ஏப்ரல் 2018 12:07:44

img

அமெரிக்காவில் செவ்வாய்  மதியம் ...சான்  ப்ருனோ என்ற இடத்தில் அமைந்துள்ள யூடியூப் தலைமையகத்தில் மூன்று துப்பாக்கிக் குண்டுகள் வெடி க்கும் சத்தம் கேட்கிறது. முதலில் அதனை பலூன் வெடிக்கும் சத்தம் என்று அங்கிருப்பவர்கள் நினைக்க , பின்னர்  சிலர் அலறல் கேட்டு அதிர்ச்சிய டைந்தனர்.

யூடியூப்

அமெரிக்காவின் கொடூர எதிரியாக மாறியிருக்கும் இந்தத் தூப்பாக்கிச் சூடு கலாசாரம், மீண்டும் ஒருமுறை அரங்கேறியிருக்கிறது. இந்த முறை மேலும் அதிர்ச்சியடை வைத்தது என்னவென்றால், அந்தத்  துப்பாக்கிச் சூட்டை நடத்தியது ஒரு பெண்.  யூடியூப்பில்  பல சேனல்களை நடத்திவந்த இந்தப் பெண்மணி,  அந்த நிறுவனம் தனக்கு அதிகம்  பார்வையாளர்கள் கிடைக்காத வண்ணம், தன் யூடியூப் கணக்குகளை முடக்குகிறது என்ற குற்றம்சாட்டு டன்,  யூடியூப் நிறுவனத்தின் மீது கடும் வெறுப்பில் இருந்திருக்கிறார். அந்தத் கோபத்தில் இந்தத்  துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருக்கலாம் என்று அமெரிக்கா காவல்துறை சந்தேகிக்கிறது. மேலும், அவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார் என்று தெரிவித்துள்ளது. இதற்கிடையே, அந்தப் பெண் யார் என்ற விவரத்தையும்  அமெரிக்கா காவல்துறை வெளியிட்டுள்ளது. அந்தப் பெண்மணியின் பெயர் நசிம் அக்தம் ( Nasim Aghdam), பர்ஷியன் நாட்டைச் சேர்ந்தவர் .  அமெரிக்காவில் சான் டியேகோ என்ற இடத்தில் தன் குடும்பத்துடன் வசித்துவந்திருக்கிறார் . 

யூடியூப்

கடந்த சில வருடங்களாகவே , அவர் யூடியூப்பில்  நான்கு சேனல்களை நடத்திவந்திருக்கிறார். சைவ பிரியர், பாடி பில்டர், விலங்குகள் உரிமைப் போராளி, கலைஞன் என்று தன்னைப் பற்றி குறிப்பிட்டுள்ள நசிம், உடற்பயிற்சி குறித்தும்,  விலங்குகள் உரிமை குறித்தும் பதிவிட்டிருக்கிறார் . மேலும், தன்னை தானே காமெடியானாக கருதி , நகைச்சுவை செய்யும் வீடியோக்களையும்  பதிவிட்டிருக்கிறார்.  சமூகவலைதளங்களில் அவரின் நட வடிக்கை கள் சரியில்லாததால், அவரின் பக்கங்கள்  அனைத்தும் முடக்கப்பட்டன.

அவர் தனக்கென ஒரு வலைதளத்தையும்  நடத்திவந்திருக்கிறார் . அதில்,  யூடியூப் நிறுவனம் தன் வீடியோக்களை  வேண்டுமென்றே முடக்கிவருவதா கவும் , தன் வீடியோக்களுக்குப்  பார்வையாளர்கள் கிடைக்காத வண்ணம் செய்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார் . ``ஒரு  பொய்யை உருவாக்கு ! அதனை எளிமையாக்கு! அதனை மீண்டும் மீண்டும் கூறு! இறுதியாக, அவர்கள் அதனை நம்பிவிடுவார்கள்”,  உலக புகழ்பெற்ற சர்வதிகாரி  ஹிட்லரின் இந்தப்  பொன்மொழியை குறிப்பிட்டு,  யூடியூப் நிறுவனமும் இப்படித்தான் பொய் கூறிக்கொண்டு சர்வாதிகாரம் செய்கிறது என்றும்  தன் வலைதளத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.மேலும், இந்த உலகத்தில் கருத்து சுதந்திரத்திற்கு  இடமே இல்லை ; யூடியூப்பில் வளர சமமான வாய்ப்புகள் அளிக்கப்படுவதில்லை என்றும் ஆதங்கப்பட்டிருக்கிறார் நசிம். 

இந்தச் சம்பவம்  நடப்பதற்கு  சில நாள்கள் முன், தன் வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார் நசிம். அமெரிக்க  காவல்துறை அவரின் தந்தை யிடம் விசாரித்ததில், கடந்த மார்ச்  31ம் தேதியிலிருந்து அவரைக்  காணவில்லை என்றும், சம்பவம் நடந்த அன்று காலையில், அவர் வீட்டிலிருந்து 500 மைல்கள்  தொலைவில் ஒரு கார் நின்றுகொண்டிருந்ததாகவும்  கூறியிருக்கிறார். இந்தத்  தாக்குதல் நடப்பதற்கு முன்பு , யூடியூப் நிறுவனத்தின் மீது நசிம் மிகவும் வெறுப்புடன் இருந்தார் என்றும் தெரிவித்தார் நசிமின் தந்தை.

நசிமின் சகோதரர் கூறுகையில், ''நாங்கள் காவல்துறைக்கு நசிம் காணாமல் சென்ற விவரம் குறித்தும், அவர் யூடியூப் நிறுவனத் தலைமையிடத்துக்குச் செல்லலாம் என்பது குறித்தும் தெரிவித்திருந்தோம்'' என்றிருக்கிறார்கள். இதற்கிடையில், கையில் துப்பாக்கியுடன் யூடியூப் நிறுவனத்துக்குள் சென்ற நசிம், அங்குள்ள காபேயிலிருந்து வெளியில் வந்த சிலரை  குறிவைத்து துப்பாக்கியில் சுட்டுள்ளார். இதில், மூன்று பேர் படுகாயம் அடைத்தனர் . பின், தன்னை தானே சுட்டுக்கொண்டு  தற்கொலை செய்துகொண்டார்  என்று அமெரிக்க காவல்துறை தெரிவித்துள்ளது . இந்தச்  சம்பவம் குறித்து விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img