என் அரசாங்கத்துடன் ஒத்துழைத்து பயணிக்க விரும்பும் எல்லாரும் அனைவரும் இணைந்து, புதிய அரசியல் பயணமொன்றைத் தொடங்கு வோம் என ரணில் விக்ரமசிங்க இன்று தெரிவித்தார்.
நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டு வெற்றிபெற்ற ரணில் விக்ரமசிங்கவை வரவேற்கும் நிகழ்வு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை யகத்தில் இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டமைக்கு நன்றி. வரும் 2020ஆம் ஆண்டில் இடம்பெறவுள்ள தேர்தல்களுக்கு முகங்கொடுக்கும் வகையில், ஐ.தே.கவில் மாற்றங்களை ஏற்படுத்தி, புதிய முகங்களை முன்கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். எனது அரசியல் பயணத்தில் புதிய நம்பிக்கையை இந்த தீர்மானம் கற்றுத் தந்துள்ளது. இதுவே வெற்றிக்கான பாதையும் கூட என்றார் ரணில்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்