யூடியூப் தலைமை அலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் துணை நிறுவனமான யூடியூப், வீடியோ சேவைகளை வழங்கி வருகிறது. யூடியூப் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமெரிக்காவின் கலிஃபோர்னியா அருகே உள்ள சான் ஃபருனோ என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில், நேற்றிரவு இங்கு வந்த பெண் ஒருவர் திடீ ரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதனால் யூடியூப் நிறுவன ஊழியர்கள் நிலைகுலைந்துப் போயினர். துப்பாக்கிச் சூட்டில் 3 பெண்களுக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. எனினும் துப்பாக்கிச் சூடு நடத்திய பெண் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீஸார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும், தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது. எனினும் துப்பாக்கிச் சூடு நடத்திய பெண் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. சமீபகாலமாக அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் அதிகரித்துள்ள நிலையில், தற்போது சமூக வலைதளமான யூடியூப் அலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கூறியுள்ள கூகுள் நிறுவன சி.இ.ஓ. `இன்று ஏற்பட்ட சோகத்தை விவரிப்பதற்கு வார்த்தைகள் இல்லை. இந்தக் கடினமான நேரத்தில் ஊழியர்க ளுக்கு ஆதரவாக இருப்போம். போலீஸ் உட்பட உதவியவர்கள் அனைவருக்கும் நன்றி'' எனப் பதிவிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்