காபூல்:
ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகள் மீது அந்நாட்டு ராணுவம் நடத்திய விமானப்படை தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது. குந்தூஸ் மாகாணத்தில் தாலிபான் இயக்கத்தினர் அணிவகுப்பு நடத்தப் போவதாக அரசுப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தானின் விமானப்படையினர் சம்பவ இடத்தை குண்டு வீசித் தாக்கினர். இந்தத் தாக்குதலில் தாலிபான் இயக்கத்தைச் சேர்ந்த 30 பேர் கொல்லப்பட்டதாக அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது.
அரசு நடத்திய இந்த தாக்குதலில் அங்கிருந்த மசூதி சேதமடைந்ததாகவும், பொதுமக்கள் பலர் உயிரிழந்ததாகவும், காயமடைந்தவர்கள் மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் மக்கள் கூறினர். மதநல்லிணக்கப் பள்ளி மீது தான் தாக்குதல் நடத்தப்பட்டதாக தாலிபான்கள் தெரி வித்துள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் அமெரிக்கப் படைகள் ஈடுபடவில்லை என்று ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகளின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்