பப்புவா நியூ கினியா தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென் மேற்கு பசிபிக் நாடுகளில் ஒன்றான பப்புவா நியூ கினியாவில், இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது, ரிக்டர் அளவு கோலில் 6.9 ஆக பதிவாகியுள்ளது. இதன் காரணமாகக் கட்டடங்கள் குலுங்கியதால், பீதியடைந்த மக்கள் சாலைகளுக்கு வந்தனர்.
இந்த நிலநடுக்கத்தினால், பசிபிக் கடல் பகுதியில் பூமிக்கடியில் சுமார் 300 கி.மீ ஆழத்தில் சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள்குறித்து இன்னும் அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்