தாய்லாந்து நாட்டில், ஒரு டபுள்டக்கர் பேருந்தில் ஏற்பட்ட தீவிபத்தினால், 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தாய்லாந்தில், நேற்று நள்ளிரவு ஒரு டபுள்டக்கர் பேருந்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மியான்மரைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தங்களின் வேலைகளை முடித்துவிட்டு நள்ளிரவு 1:30 மணியளவில் சென்றுகொண்டிருந்தனர். பேருந்து, மியான்மர் எல்லைப் பகுதிக்கு அருகில் சென்றுகொண்டி ருக்கும்போது, பேருந்தின் மத்தியில் எதிர்பாராதவிதமாக தீப்பற்றியது. இதை உணர்ந்த ஓட்டுநர், பயணிகளை எச்சரிக்கைசெய்துள்ளார். அதற்குள், பேருந்தின் மற்ற இடங்களுக்கும் தீ வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது. டபுள் டக்கர் பேருந்து என்பதால், மேல் பகுதியில் உள்ளவர்களும் கீழே உள்ளவர்களும் வெளியேற ஒரேஒரு வழி மட்டுமே இருந்துள்ளது.
பேருந்தின் கீழ்ப் பகுதியில் இருந்தவர்களும், முன் பக்கம் இருந்தவர்களும் தீ பற்றிய உடனேயே தப்பிவிட்டனர். மேல் பகுதியில் இருந்தவர்களும் பேருந்தின் கடைசியில் இருந்தவர்களும் வெளியில் செல்ல முடியாமல் உள்ளேயே மாட்டிக்கொண்டனர். இந்த விபத்தில், 20 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், தீயை வேகமாக அணைத்தனர். இறந்தவர்களைப் பேருந்திலிருந்து வெளியேற்றிவிட்டு, பாங்காக் தொழிற்பேட்டைக்குப் பேருந்து கொண்டுசெல்லப்பட்டது.
கடந்த இரண்டு வாரத்துக்குள், தாய்லாந்தில் ஏற்பட்ட இரண்டாவது மிகப்பெரிய சாலைவிபத்து இதுவாகும். முன்னதாக, தாய்லாந்து மலைப்பகுதியில் சென்ற பேருந்து, நிலை தடுமாறிய விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். அதையடுத்து, தற்போது இந்த தீவிபத்து நிகழ்ந்திருப்பது, அந்நாட்டு மக்களை மிகவும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. உலகில், அதிக சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ள நாடுகளில் தாய்லாந்து இரண்டாவது இடத்தில் உள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்