img
img

சீனாவை தாக்கிய மணல் புயல் : காற்று மாசு காரணமாக பொதுமக்கள் கடும் அவதி
வியாழன் 29 மார்ச் 2018 13:52:22

img

பீஜிங்:

சீனாவை தாக்கிய மணல் புயலால் உருவான காற்று மாசால் தலைநகர் பீஜிங் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. இரண்டு நாட்களாக தொடர்ந்து வீசும் மணல் புயலால் பீஜிங்கின் வானுயர்ந்த கட்டிடங்கள் புழுதி மற்றும் தூசியால் சூழப்பட்டுள்ளன. மணல் துகள்கள் படிந்து சாலைகளும் மோசமான தூசு மண்டலமாக காணப்படுகிறது. தற்போது Tianjin, Hebei, Shanxi, Jilin, Liaoning உள்ளிட்ட 6 மாகாணங்களுக்கு உட்பட்ட 15 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு காற்று மாசுப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் முகமூடி அணிந்து வெளியே செல்கின்றனர். இது பற்றி பேசிய காப்பீட்டு நிறுவன ஊழியரான கயோ ஷான் என்பவர், மோசமான காற்று மாசினால் சுவாசிக்க மிகவும் சிரமமாக உள்ளது. எனவே தான் முகமூடி அணிந்து செல்லும் நிலை உருவாகியுள்ளதாக கூறினார். 

மேலும் பேசிய அவர் இளம் வயதினரே தூசியை எதிர்கொள்ள முடியாமல் போராடும் போது, முதியவர்களின் நிலையோ பரிதாபமாக உள்ளதாக குறி ப்பிட்டார். சுவாசம் மற்றும் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க முகமூடி அணிந்து செல்வது தற்போது அத்தியாவசியமாவிட்டதாக கூறினார். மங்கோலிய எல்லையில் உள்ள பாலைவன பிரதேசத்திலிருந்து சீனாவை மணல் புயல் தாக்கும் என அந்நாட்டு வானிலை மையம் ஆரஞ்ச் மாசுபாடு எச்சரிக்கை விடுத்தது. இதனால் வீடு மற்றும் கடைகளின் கதவுகள், ஜன்னல்களை மூடி வைக்க அறிவுறுத்தப்பட்டது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img