தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிர் பிழைத்து வெளிநாட்டில் வாழ்ந்துவந்த மலாலா நேற்று முதல்முறையாக பாகிஸ்தான் திரும்பினார்.
பாகிஸ்தானில் ஸ்வாட் மாவட்டத்தில் பிறந்த மலாலா தனது 12 வயதில், பாகிஸ்தானில் பெண் குழந்தைகளின் கல்வியை எதிர்க்கும் தலிபான்கள் பற்றி பிபிசி உருதில் கட்டுரை எழுதத் தொடங்கினார். தீவிரவாதிகளின் அடக்குமுறையில் பெண் கல்வி எப்படி உள்ளது என்பதைப் பற்றி பேசிவந்தார். இதனால் தலிபான்கள் மலாலாவை துப்பாக்கியால் தலையில் சுட்டனர். மேற்கத்திய கலாசாரத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டதால் அவரைத் தாக்கியதாக தலி பான்கள் கூறினர். இதனையடுத்து அவர் வெளிநாட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்தார்.
இதனைத்தொடர்ந்து தாக்குதலுக்குப் பிறகு முதல்முறையாக நேற்று பாகிஸ்தான் வந்தார் மலாலா. இவர் அங்கு நான்கு நாள்கள் தங்கியிருப்பார் எனத் தெரிகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் பாகிஸ்தான் வருவதை ரகசியமாக வைத்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இவர் பாகிஸ்தான் பிரதமரை நேரில் சென்று சந்திப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2014 ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு மலாலாவுக்கு அறிவிக்கப்பட்டது. பெண் குழந்தைகளின் உரிமைக்காகப் போராடியதால் இவருக்கு இந்தப் பரிசு வழங்கப்பட்டது. மிகச் சிறு வயதில் நோபல் பரிசு மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு பெறும் முதல் பாகிஸ்தானியர் என்ற பெருமையைப் பெற்றார் மலாலா. கடந்த ஆண்டு அவருக்கு ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படிக்க இடம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்