சிட்னி : ஆஸ்திரேலியாவில் உள்ள ஹேம்லின் பே கடற்கரையில் 150 திமிங்கலங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது வனவிலங்கு நல ஆர்வ லர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற மருத்துவம் மற்றும் தன்னார்வ குழுவினர் அவற்றை மீட்டனர்.
பெர்த் நகரையொட்டிய ‘ஹேமலின் பே’ கடற்கரையில் நூற்றுக்கணக்கான பைலட் வகை திமிங்கலங்கள் நேற்று காலை கரை ஒதுங்கியிருப்பதை மீன வர்கள் கண்டனர். இது குறித்து அவர்கள் அளித்த தகவலின்பேரில், அங்கு வந்த வன விலங்குகள் துறை அதிகாரிகள், திமிங்கலங்களை மீண்டும் கட லுக்குள் கொண்டு விடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.ஆனால் அதில் 5 திமிங்கலங்கள் மட்டுமே காப்பாற்ற முடிந்ததாக மருத்துவ குழு தெரி வித்துள்ளது.
பின்னர் அவற்றைக்கு சிகிச்சைக்கு அளிக்கப்பட்டு மீண்டும் ஆழ்கடல் பகுதிக்கு விடப்பட்டன. உயிரிழந்த திமிங்கலங்கள் அதிகபட்சமாக 16 அடி வரை உள்ளதாகவும் ஆழ்கடலில் இருந்து பாறை நிறைந்த பகுதிகளுக்கு வந்ததால் அவை உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரை ஒதுங்குவது ஏன்?
‘ஹேப்’ எனப்படும் ஒரு வகை கிருமித் தொற்றால் பாதிக்கப்படும் திமிங்கலங்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு கரை ஒதுங்கும். அதுதவிர, இரை தேடி முன்னே செல்லும் திமிங்கிலம் வழி தவறி விடுமானால், அதைப் பின்பற்றிச் செல்லும் திமிங்கிலங்களும் வழி தவறி கரை ஒதுங்கும் என்கின்றனர் கடல் ஆராய்ச்சியாளர்கள்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்