26 படையினர் கொலை.. 3 முன்னாள் புலி உறுப்பினர்களின் வழக்கு பதிவு வவுனியாவில் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் 3 பேரின் வழக்கு விசாரணை அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் இருந்து வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
2009ம் ஆண்டு 18 கடற்படை வீரர்கள் மற்றும் 8 இராணுவ வீரர்கள் வவுனியாவில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் 3 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை வவுனியாமேல் நீதிமன்றில் எடுத்து க்கொள்ளப்பட்ட நிலையில் சட்டமா அதிபரின் கோரிக்கைக்கு அமைய அனுராதபுரம் மேல் நீதிமன்றிற்கு மாற்றப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த தீர்மானத்திற்கு எதிராக, குற்றம்சாட்டப்பட்டுள்ள விடுதலைப்புலி உறுப்பினர்கள் மூவரும் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதன் தீர்ப்பிற்கு அமையவே வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு குறித்த வழக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்