கண்டியிலும், அம்பாறையிலும் நடைபெற்ற இனக் கலவரங்களால் சிங்கள மக்கள் கவலைப்படுகிறார்கள் என்பதில் எந்த உண்மையும் இல்லை. அவர்கள் அதுகுறித்து எப்போதும் கவலைப்படுவதில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார். இன ஒற்றுமை என்ற தலைப்பில் கொழும்பில் நடந்த கலந்துரையாடல் ஒன்றில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
1983ஆம் ஆண்டில் தமிழ் மக்கள் தாக்கப்பட்ட சந்தர்ப்பத்திலும் சிங்கள மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். சில ஆண்டுகளுக்குப் பின்னரே அது தவறு என உணர்ந்தனர். அரேபிய கலாச்சாரத்தை இலங்கை முஸ்லிம்கள் பின்பற்றுவது சிங்களவர்களுக்கு பிரச்சினையாக உள்ளது. எனவே அவர்களை தனிமைப்படுத்த முயற்சிக்கின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
உலகத்தில் பல இனங்கள் ஒன்றுசேர்ந்து வாழாத சமூகம் எங்கிருக்கிறது? எல்லோரும் ஒன்றுபட்டு ஒரு புரிதலுடன் வாழவேண்டும் என்பதை சிங்களவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன் என்றார் அவர்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்