அமெரிக்கா, பிரிட்டன் நாடுகள் தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைப்பதற்கு தொடர்ந்தும் ஒத்தாசை புரியவேண்டும் என்றார் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.
போர்குற்றங்கள் செய்தவர்களை தண்டிப்பதாக இலங்கை அரசு உறுதி வழங்கிங்கினாலும் உண்மையில் அவர்களை தண்டிக்காது. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு காணாமல்போனவர்களுக்கு என்ன நடந்தது என கேட்டபோது அவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்தது அரசாங்கம்.
மக்களுக்கு எதிராக குற்றமிழைத்தவர்களை தண்டிக்கவேண்டியது ஒரு அரசின் கடமையாகும். அதை இலங்கை அரசு ஒருபோதும் செய்யாது. அவர்கள் குற்றவாளிகளின் பக்கமே இருக்கிறார்கள். அதுபோல் உள்நாட்டு விசாரணை என்பதும் குற்றவாளிகளை பாதுகாப்பதாகவே இருக்கும்.
நான் 2015ஆம் ஆண்டும் 2017ஆம் ஆண்டும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்குக் கடிதம் எழுதியிருந்தேன். இலங்கையை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தும்படி. அதேபோல் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நேரில் வந்தபோதும் அதையே கூறினேன். இலங்கைக்குள் சீனாவின் தலையீடு அதிகரித்தது போல பல்வேறு உலக அரசியல் தந்திரங்களை மனதில் வைத்தே அவர்கள் இலங்கைக்கு உதவ முற்பட்டார்கள் என்றார் சி.வி.விக்னேஸ்வரன்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்