ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றிபெற்று நான்காவது முறையாக அதிபரானார் விளாடிமிர் புதின்.
ரஷ்யாவின் அதிபர் தேர்தல் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம் கடந்த 2000 ஆண்டு முதல் அதிபராகவும், பிரதமராகவும் விளாடிமிர் புதின் உள்ளார். தற்போது இவரின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது. மக்கள் அனைவரும் ஆர்வமாக வாக்க ளித்தனர். வாக்கு பதிவு முடிவடைந்த உடனேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.பதிவான மொத்த வாக்குகளின் 76% வாக்குகளைப் பெற்று விளா டிமிர் புதின் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் வரும் 2024-ம் ஆண்டு வரை அவரே அதிபர் பதவியில் நீடிப்பார். ரஷ்ய கூட்டமைப்பு கம்யூ னிஸ்ட் கட்சிகள் சார்பில் போட்டியிட்ட பவெல் குரூடின் 12% வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். 76% வாக்குகள் பெற்றதால் எதிர்க்கட்சி களே இல்லாமல் புதின் அசைக்க முடியாத வெற்றியை பெற்றுள்ளார்.
வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய புதின், கடந்த 5 ஆண்டுகளில் ரஷ்யாவின் முன்னேற்றத்திற்கு நாம் உழைத்த உழைப்புக்குக் கிடைத்த வெற்றி எனக் கூறினார். மேலும் மற்ற உலகத் தலைவர்களும் இவரின் வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்