காத்மாண்டு: நேபாளத்தில் வங்கதேசத்தின் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 65 பேர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்ப டுகிறது. வங்கதேசத்தை சேர்ந்த பயணிகள் விமானம் 78 பயணிகளுடன் அமெரிக்காவில் இருந்து வங்க தேசத்துக்கு சென்று கொண்டிருந்தது. நேபா ளத்தின் காத்மாண்டு விமான நிலையம் அருகே உள்ள கால்பந்து மைதானத்தில் விமானம் விழுந்து நொறுங்கியது.
இதில் விமானம் கரும்புகையுடன் தீப்பிடித்து எரிந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த 13 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் நேபாள ராணுவத்தினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். விமானம் முழுவதும் தீப்பற்றி எரிவதால் எஞ்சிய 65 பயணிகள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது, மோசமான வானிலையால் விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என கூறப்படுகிறது. விமான விபத்தை தொடர்ந்து காத்மாண்டு விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்