ஜெனிவா:
சிரியாவில் அரசுப்படைகளும், ரஷ்யப்படைகளும் 13 நாட்களாக நடத்தி வரும் தாக்குதலில் பலி எண்ணிக்கை 674ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் சிரியாவில் நடப்பது அப்பட்டமான போர்க்குற்றம் என ஐநா தெரிவித்துள்ளது. சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் அருகேயுள்ள கிழக்கு கவுட்டா நகரில் அரசுப்படைகளின் ஆதரவுடன் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதாக கூறி ரஷ்ய விமானப்படை குண்டுவீசி வருகிறது. இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் உட்பட ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தினமும் ஐந்து மணிநேரம் தாக்குதல் நிறுத்தி வைக்கப்படும் என்று ரஷ்யா தெரிவித்தது.
இருந்தபோதிலும் வான்வழித் தாக்குதல் நடத்தி வருவதாக பல்வேறு நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைய பேரவை ரஷ்யாவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. சிரியாவில் நடைபெற்று வரும் போர் விவகாரம் தொடர்பாக ஸ்விட்சர்லாந்து தலைநகர் ஜெனிவாவில் கூடிய மனித உரிமை பிரிவு கூட்டத்தில் பெரும்பாலான நாடுகளின் உறுப்பினர்கள் பங்கேற்றனர். அப்போது பேசிய சிரியா பிரதிநிதி, தாங்கள் நடத்தி வரும் தாக்குதலை உலக நாடுகள் மிகைப்படுத்தி வருவதாக கூறியுள்ளார். இறுதியில் பேசிய மனித உரிமை ஆணைய பேரவை தலைவர், சிரியாவில் நடப்பது அப்படமான போர்க்குற்றம் என்றும் கிளர்ச்சியாளர்களை காரணம் காட்டி அப்பாவி பொதுமக்களை கொல்வது நிறுத்தப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்