img
img

ஹிலாரியைப் பார்த்ததும் திரும்பி நின்ற அமெரிக்க மக்கள்
வியாழன் 29 செப்டம்பர் 2016 16:18:01

img

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில், பார்வையாளர்கள் அவருடன் கூட்டமாக செல்பி எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாக இணையத்தில் பரவி வருகிறது. அமெரிக்காவின் அடுத்த அதிபரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற நவம்பர் 8-ந் தேதி நடைபெற இருக்கிறது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர். இவர்களில் ஹிலாரிக்கே அதிக வெற்றி வாய்ப்பு இருப்பதாக பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. இதனால் அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், முன்பு மாதிரி தமக்கு பிடித்தமான தலைவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள மேடைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் மக்களுக்கு இருப்பதில்லை. தங்களது செல்போன் மூலமே பிடித்தவர்களுடன் செல்பி எடுத்துக் கொள்கிறார்கள். அந்தவகையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்தார் ஹிலாரி. அவர் வந்ததும், அங்கு கூடியிருந்த மக்கள் உடனடியாக திரும்பி நின்று கொண்டனர். வேறு எதற்கு ஹிலாரியுடன் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொள்ளத்தான். ஒரே நேரத்தில் அங்கு கூடியிருந்தவர்கள் அனைவரும் திரும்பி நின்றது, பார்ப்பதற்கு அவர்களது எதிர்ப்பை பதிவு செய்வது போல் காட்சி அளித்தது. ஆனால், அது செல்பிக்காகத் தான் என்பது அவர்களது கைகளில் உள்ள செல்போனைப் பார்த்த பிறகே புரிகிறது. ஹிலாரியும் சிரித்த முகத்துடன் பொறுமையாக ஒவ்வொரு பக்கமாகத் திரும்பி செல்பிக்கு போஸ் கொடுத்துள்ளார்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img