சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு கௌட்டாவில் தினமும் 5 மணி நேரம் போர் நிறுத்தம் செய்ய ரஷ்யா உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு முதல் சிரியாவில் அதிபர் பஷீர் அல் ஆசாத்துக்கு எதிராகக் கிளர்ச்சியாளர்கள் போரில் ஈடுபட்டு வருகின்றனர். சிரியா அதிபருக்கு ஆதரவாக ரஷ்யா களமிறங்கியது. கடந்த 8 ஆண்டுகளாக இந்தப் போர் தொடர்கிறது. இந்நிலையில் சிரியா தலைநகர் டமாஸ்கஸ்க்கு அருகே உள்ள கிழக்கு கௌட்டா பகுதியில் கிளர்ச்சியாளர்களுக்கும் அரசு ஆதரவுப்படையினருக்கும் இடையே கடந்த சில நாள்களாக மிகவும் உக்கிரமாகப் போர் நடந்து வருகிறது. அரசுப் படைகள் கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து நடத்தும் தாக்குதல்களில் அப்பாவி மக்கள் உயிரிழந்து வருகின்றனர். கடந்த 8 நாள்களில் மட்டும் கிழக்கு கௌட்டாவில் 500-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.
சிரியா அரசு ஆதரவுப்படை நடத்திய வான்வழித் தாக்குதல்களில் படுகாயமடைந்த குழந்தைகளின் புகைப்படங்கள் சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. சிரியாவில் உள்ள மனித உரிமைகள் அமைப்பின் கண்காணிப்புக் கூடத்தில் (Syrian Observatory for Human Rights) இருந்து ஊடகங்களுக்கு கிடைத்த தகவலின்படி நேற்று நள்ளிரவிலிருந்து கிழக்கு கௌட்டாவில் அமைதி நிலவுகிறது. நேற்று காலை கௌட்டாவில் உள்ள டவுமா டவுனில் நான்கு முறை வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்குப் பின்பு இதுவரை எந்தத் தாக்குதல்களும் நடத்தப்படவில்லை. இதனிடையே சிரியா அரசு ஆதரவுப் படைகள் குளோரின் ரசாயனக் குண்டுகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாகக் கௌட்டா குண்டுவீச்சில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவம் பார்த்த ஊழியர்கள் கூறியுள்ளனர். ஆனால், ரசாயனக் குண்டுகள் பயன்படுத்தப்படவில்லை என்று ரஷ்யா மற்றும் சிரியா ராணுவம் மறுத்து வருகிறது.
தற்போதைய நிலவரப்படி கிழக்கு கௌட்டா பகுதியில் 4 லட்சம் பொதுமக்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர்களின் பாதுகாப்புக்காக ஐ.நா தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. முன்னர் கிழக்கு கௌட்டாவில் சண்டை நிறுத்தத்துக்கு ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் அழைப்பு விடுத்தது. கடந்த 24-ம் தேதி சிரியாவில் 30 நாள்கள் போர் நிறுத்தம் செய்யும் தீர்மானத்துக்கு ஒப்புதலும் அளித்தது. ஆனால், அதற்குப் பிறகும் தாக்குதல் தொடர்ந்தது.
தற்போது ரஷ்யாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்கேய் ஷொயகு மனிதாபிமான போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். `சிரியா நேரப்படி காலை 9 மணி முதல் 2 மணி வரை தினமும் ஐந்து மணிநேரம் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும். போர் நிறுத்தத்தின்போது கிழக்கு கௌட்டாவில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல ஏதுவாக சிரியா ரெட் கிரெசன்ட் அமைப்பினர் பாதைகள் அமைத்து, மக்களுக்கு தகவல் கொடுப்பார்கள்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த ஐந்து மணி நேர உடன்பாட்டை ஐ.நா சபை வரவேற்றுள்ளது. ஆனாலும், 30 நாள் போர் நிறுத்தத்தை அமல்படுத்த வலியுறுத்தி வருகிறது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்