தென்னாப்பிரிக்கா அதிபர் பதவியிலிருந்து ஜேக்கப் ஜுமா பதவி விலகியுள்ளார். ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் சார்பில் கடந்த 2009-ம் ஆண்டு 4வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ராஜினாமா செய்யாவிட்டால் நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலம் பதவி இழக்கச் செய்வோம் எனக் கட்சித் தலைமை அறிவித்ததால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். இதையடுத்து, தென்னாப்பிரிக்காவின் புதிய அதிபராக ஜேக்கப் ஜுமாவின் அமைச்சரவையில் துணை அதிபராக இருந்த சிரில் ராமபோசா தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிரில் ராமபோசா ஒரு தொழிலதிபரும்கூட. அடுத்த வாரம் இவர் பதவியேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாகச் சிரிலுக்கும் ஜூமாவுக்கும் அதிகாரப் போட்டி இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த அதிகாரப் போட்டியில் ஜூமாவை முந்தி சமீபத்தில் கட்சித் தலைவராகப் பொறுப்பேற்ற சிரில் ராமபோசா தற்போது அதிபர் அரியணையை அலங்கரிக்கவுள்ளார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்