போலந்து நாட்டில் கத்தோலிக்க மதத் தலைவரான போப் ஆண்டவர் பயன்படுத்திய வாகனங்கள் ஏலத்தில் விடப்பட்டுள்ளதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. கத்தோலிக்க மதத்தலைவரான போப் பிரான்சிஸ் புகலிடம் கோரி வரும் அகதிகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். அகதிகளுக்கு புகலிடம் அளிப்பது மட்டுமில்லாமல் அவர்களுக்கு நிதியுதவியையும் போப் பிரான்சிஸ் செய்து வருகிறார். இந்நிலையில், போலந்து நாட்டில் கத்தோலிக்க தேவாலயம் சார்பில் நடைபெற்ற உலக இளைஞர்கள் தின நிகழ்ச்சியில் போப் பிரான்சிஸ் கலந்துக்கொண்டார். இதனை தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு நிகழ்ச்சிகளிலும் போப் பிரான்சிஸ் கலந்துக்கொண்டார். இதற்காக, அவர் 3 வாகனங்களில் பயணம் செய்துள்ளார். தற்போது இந்த 3 வாகனங்களையும் விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் தொகையை அகதிகளுக்கு செலவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த ஏலமானது கடந்த யூலை மாதமே விடப்பட்டுள்ளது. எதிர்வரும் அக்டோபர் 9-ம் திகதி வரை இந்த 3 கார்களும் ஏலத்தில் இருக்கும். இதுமட்டுமில்லாமல், போப் பிரான்சிஸ் பயன்படுத்திய இந்த 3 கார்களிலும் ”KI POPE", "K2 POPE" மற்றும் "K3 POPE” என்ற பெயர்கள் இடம் பெற்றுருக்கும். மேலும், இக்கார்களில் போப் பிரான்சிஸ் எங்கு பயணம் செய்தார் என்பது உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய ஆவணங்களும் வழங்கப்படும். தற்போது லெபனான் நாட்டில் புகலிடத்திற்காக காத்திருக்கும் அகதிகளின் மருத்து பயன்பாட்டிற்காக இந்த ஏலத்தொகை பயன்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்