img
img

கிளிநொச்சி படையினருக்கு மண் அகழ்வு அனுமதி!
வியாழன் 29 செப்டம்பர் 2016 16:04:25

img

கிளிநொச்சி கரைச்சிப் பிரதேசத்தில் இராணுவத்தினரின் தேவைக்காக மணல் அகழ்விற்கானஅனுமதியை கரைச்சிப்பிரதேச செயலகம் முறையற்ற விதத்தில் வழங்கியிருந்ததாகதெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள உருத்திரபுரம் கே.என்32 கிராம அலுவலர் பிரிவிற்கு உட்பட்ட குடமுருட்டிப் பாலத்திற்கு அருகில்சட்டவிரோத மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வந்தமை தொடர்பில் கடந்த 5ம் திகதிபிரதேச செயலாளர் அவர்களால் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற நீதிவான் அவர்கள் மண் கடத்தல்காரர்களினால்அமைக்கப்பட்ட பாதையை அகற்றுமாறு பொலிசாருக்கு உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 9ம் திகதி அந்தப் பகுதியில் இராணுவத்தினர் மண் அகழ்வில் ஈடுபட்டுள்ளனர். இதையறிந்த கிளிநொச்சிப் பொலிஸார் மணல் அகழ்வில் ஈடுபட்ட இராணுவத்தினரின்அனுமதி தொடர்பில் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தனர். இதனையடுத்து முறையற்ற விதத்தில் அனுமதி வழங்கியிய பிரதேச செயலாளரை கடந்த14ம்திகதி மன்றுக்கு சமுகமளிக்குமாறு கட்டளையிடப்பட்ட போதும் அவர் சார்பாக பிரதேசசெயலகத்தின் மணல் அகழ்வு அனுமதி வழங்கும் அதிகாரி நீதிமன்றில்முன்னிலையாகியிருந்தார். இதன்போது 28-09-2016 நேற்றைய தினம் பிரதேச செயலாளர் மன்றுக்கு சமுகமளிக்கவேண்டும் நீதிமன்றம் உத்தரவிட்டநிலையில் பிரதேச செயலார் மன்றுக்குசமுகமளிக்கவில்லை. இந்நிலையில் பிரதேச செயலாளர் தனது அறிக்கையினை மன்றுக்கு தனது உத்தியோகத்தர்ஊடாக சமர்ப்பித்த நிலையில் நீதிமன்றம் உடனடியாக பிரதேச செயலாளரை ஆஜராகுமாறுஇறுதி கட்டளை பிறப்பித்ததையடுத்து சற்றுநேரத்தில் பிரதேச செயலாளர்முன்னிலையாகியுள்ளார். இதனையடுத்து பிரதேச செயலாளர் கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டதுடன், நீதிமன்றநடவடிக்கையை அதிகாரிகள் புறக்கணிக்குமிடத்து கடுமையான சட்டநடவடிக்கைஎடுக்கப்படும் எனவும் பொலிசாருக்கு உடனடியாக வாக்குமூலம் வழங்குமாறும்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img